திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 ஜனவரி 2018 (23:15 IST)

பெண் கொடுத்த பாலியல் புகாரில் கைதான பிரபல பாடகர்

இளம்பெண்ணுக்கு பாலியல் புகார் தொடர்பாக, பிரபல தெலுங்கு பாடகர் கஜல் சீனிவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல தெலுங்கு பாடகர் கெசிராஜீ ஸ்ரீனிவாஸுக்கு சொந்தமான ஆலயவாணி வெப் ரேடியோவில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு (வயது 29) பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதில் சீனிவாஸ் தன்னை நீண்ட நாட்களாக பாலியல் ரீதியாக  துன்புறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சீனிவாஸ் தன்னிடம் கடந்த 8 மாதங்களாக தவறாக நடந்து வந்துள்ளார். பலமுறை எச்சரித்தும் அவர் மாறவில்லை. அவரின் தொந்தரவு எல்லை மீறியதால் நான போலீஸில் புகார் அளித்தேன் என்று  கூறியுள்ளார்.
 
அந்த பெண் அளித்த புகாரை பதிவு செய்த போலீசார், கஜல் சீனிவாஸ் கைது செய்து, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு 76 மொழிகளில் பாடல்களைப் பாடி, காந்தி நினைவு நாள் நிகழ்ச்சியை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் முன்னிலையில் சிறப்பாகச் செய்து, கின்னஸ் உலக சாதனை படைத்தவர். பல்வேறு மொழிகளில்  பாடும் இவரது திறமையை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் குறிப்பிட்டனர்.