1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 15 நவம்பர் 2017 (15:12 IST)

ஹார்வி வெயின்ஸ்டீன்; தொடரும் பாலியல் புகார் பட்டியலில் மேலும் ஒரு நடிகை

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சமீபத்தில்தான் வெளியே வந்துள்ளது. பல ஆண்டுகள் கழித்து நடிகைகள் வெயின்ஸ்டீன் பற்றி பேசியுள்ளனர்.

 
தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல ஹாலிவுட் நடிகைகள் புகார் கூறியுள்ளனர்.  இநைலையில் தற்போது வாய்ப்பு கேட்டு வந்த பல நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
நடிகைகள் சுமார் 100 அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜேன் டோ என்ற நடிகை வெயின்ஸ்டீன் மீது  பலாத்கார புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். மார்கோ போலோ டிவி சீரியலில் வாய்ப்பு கேட்டு ஹோட்டலுக்கு வந்த ஜேனை இடுப்பை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து வைத்துக் கொண்டு சுயஇன்பம் அனுபவித்துள்ளார் வெயின்ஸ்டீன்.  மீண்டும் சீரியலில் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியை தெரியப்படுத்த ஜேன் வெயின்ஸ்டீனை அதே ஹோட்டலில் மீண்டும் சந்தித்துள்ளார். அப்போதும் ஜேனை பலாத்காரம் செய்துள்ளார். 
 
கொடுமை என்னவென்ரால் ஜேனுக்கு அந்த சீரியலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லையாம். இந்நிலையில் ஜேன் தற்போது  வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.