1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (15:32 IST)

பாலியல் புகார் அளிக்க புதிய இணையதளம்: மேனகா காந்தி

பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகளை புகார் செய்ய என தனி இணையதளம் ஒன்றை மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவித்துள்ளார். SheBox.nic.in   என்ற இணையத்தில் பாலியல் வன்கொடுமை குறித்து பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும் இந்த புகார்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



 
 
பெண்கள் பாலியல் புகார் அளிக்க காவல்நிலையம் செல்லும்போது அவர்களுக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்படுவதாகவும், இதன் காரணமாகவே இந்த இணையதளம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் மேனகா காந்தி கூறியுள்ளார்
 
மேலும் பல பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகளை பல்வேறு காரணங்களுக்காக புகார் அளிக்காமல் விட்டுவிடுவதாகவும், இதன் காரணமாக பாலியல் குற்றவாளிகள் துணிச்சலாக மேலும் பல தவறுகள் செய்வதாகவும், இந்த இணணயதளம் மூலம் இவற்றுக்கு முடிவு கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.