திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2017 (14:36 IST)

நிர்வாணமாக நடிக்க வைத்தார் ; அவர் ஒரு காம அரக்கன் - நடிகை பகீர் புகார்

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் ஒரு காம அரக்கன் என நடிகை சல்மா ஹாயக் என கருத்து தெரிவித்துள்ளார்.


 
ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல ஹாலிவுட் நடிகைகள் புகார் கூறியுள்ளனர்.  
 
மேலும், ஜேன் டோ என்கிற நடிகை, சீரியலில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஹார்வை தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, நடிக்கும் வாய்ப்பை தனக்கு தரவில்லை என புகார் அளித்த அவர், இது தொடர்பாக தற்போது நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 
இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹாயக், ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். 
 
பல வருடங்களாக ஹார்வி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவர்தான் என் அரக்கன். அவருக்கு முடியாது என்று சொன்னால் பிடிக்காது. கண்ட நேரத்தில் என் ஹோட்டல் அறைக்கு வந்து என்னை தொந்தரவு செய்தார். ஆனால், அவரின் ஆசைக்கு நான் அடிபணியவில்லை.


 
தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு கேட்டார். ஓரல் செக்ஸ் வேண்டுமென்றார். ஒன்றாக சேந்து குளிக்கலாம் என்றார், நீ குளி நான் பார்க்கிறேன் என்றார். நான் எதற்கும் சம்மதிக்கவில்லை. இதனால், அவர் என் மீது கோபம் அடைந்தார். நான் நடித்த ப்ரீடா படத்தை வெளியிடுவதில் பிரச்சனை செய்தார்.
 
அப்படி வெளியிட வேண்டுமெனில், அப்படத்தில் ஒரு நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டுமென கட்டாயப்படுத்தினார். எனவே, வேறு வழியில்லாமல் நடித்தேன். அதன் பின்பே அப்படத்தை அவர் வெளியிட அனுமதி அளித்தார்” என சல்மா புகார் கூறியுள்ளார்.