விரைவில் 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் சர்தார்!
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்தார். இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளி பண்டிகையொட்டி நேற்று முன் தினம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் சர்தார் திரைப்படம் முதல்நாளில் சுமார் 6.91 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி வரும் நாட்களில் இந்த வசூல் கூட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 4 நாட்களில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் 34 கோடி ரூபாயும் உலகளவில் 42 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலித்து விடும் என சொல்லப்படுகிறது.