1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2022 (15:05 IST)

சர்தார் படத்தின் மூன்று நாள் வசூல் விவரம்… தீபாவளி ரேஸில் முன்னணி!

கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் கடந்த 21 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்தார். இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படத்தை   பிஎஸ் மித்ரன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு  ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம்  தீபாவளி பண்டிகையொட்டி நேற்று முன் தினம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் சர்தார் திரைப்படம் முதல்நாளில் சுமார் 6.91 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி வரும் நாட்களில் இந்த வசூல் கூட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதையடுத்து சனிக்கிழமை குறைந்த வசூல், ஞாயிற்று கிழமையில் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மூன்று நாளில் மொத்தமாக 20 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய படங்களில் சர்தார் படம்தான் வசூலில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.