1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 செப்டம்பர் 2022 (17:52 IST)

ஓய்...உம்மை Block பண்ண முடியில...சரியான தொல்லையப்பா- கார்த்தி டுவீட்

karthy
நடிகர் கார்த்தி தன் டுவிட்டர் பக்கத்தில், ஓய்... உம்மை  Block பண்ண முடியில...சரியான தொல்லையப்பா என டுவீட் பதிவிட்டுள்ளார்.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படடத்தின் ஆடியோ விழா வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளன. இந்த நிகழ்வில் படக்குழுவினர் . இந்த விழாவில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இதை மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் வந்தியத் தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் block செய்யவும் முடியவில்லை report பண்ணவும் முடியவில்லை….சரியான தொல்லையப்பா எனத் தெரிவித்து ஒரு வீடியோ கிளிப் வெளியிட்டுள்ளார், அதில், நடிகர் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் நம்பி வேடத்தில்  நடித்துள்ளார்,. அவரைக் கலாய்க்கும் விதமாக கார்த்தி இப்படி டுவீட் பதிவிட்டுள்ளார்.