வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 22 அக்டோபர் 2022 (19:39 IST)

சர்தார் சூப்பர் ஹிட் கார்த்தி டுவீட்டை கிண்டலடித்த ப்ளூசட்டை மாறன்

''சர்தார் ''படம் சூப்பர் ஹிட் என்று கார்த்தி பதிவிட்டுள்ளதற்கு   ப்ளூ சட்டை மாறன் டுவீட் பதிவிட்டுள்ளார். 

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்தார். இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படத்தை   பிஎஸ் மித்ரன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு  ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படம்  தீபாவளி பண்டிகையொட்டி நேற்று ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், சர்தார் படம் மக்களின் வரவேற்பை பெற்றது குறித்து, கார்த்தி தன் தன் டுவிட்டர் பக்கத்தில், மக்களே, சர்தார் படத்தை வெற்றி அடைய செய்ததற்காக  உங்களுக்கு மிக நன்றிகள்….உங்கள் பாராட்டுகளில் படக்குழு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே, சர்தார் படத்தைப் பற்றி நேற்று தன் தமிழ் டாக்கீஸ் என்ற யூடியூப்பில் கடுமையான விமர்சித்த ப்ளூசட்டை மாறன் கார்த்தி சர்தார் படம் சூப்பர் ஹிட் என்று பதிவிட்டுள்ளதற்கு ரிலீஸான ஒரே நாளில் சூப்பர் ஹிட் ஆனது என்று கிண்டலடித்துள்ளார்

Edited by Sinoj