வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2023 (10:08 IST)

பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. \
 
இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடியவில்லை என்றும் இரவு பகலாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் எனவே புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.  
 
‘சலார்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒத்துழைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளிவராததால் தங்களது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவிபஸ்ருர் இசையமைத்துள்ளார். ’கேஜிஎப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி உள்ளார்
 
Edited by Mahendran