தொடர்ந்து ப்ளாப் படங்கள்… பிரபாஸின் சலார் பிஸ்னஸில் சுணக்கம்!
பாகுபலிக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் பிரபாஸ் தவித்து வரும் நிலையில் சமீபத்தில் ரிலீஸான அவரின் ஆதிபுருஷ் திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.
இந்த படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்த நிலையில் இப்போது ஜனவரி மாதத்துக்குத் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அந்த தேதியில் இப்போது வேறு சில படங்கள் ரிலீஸுக்கு திட்டமிட்டு வருகின்றன.
இந்நிலையில் பாகுபலிக்குப் பிறகு பிரபாஸுக்கு ஹிட் அமையாததால் அவரின் சலார் திரைப்படத்தின் ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமையை வாங்க எந்த ஓடிடி நிறுவனமும் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது.