1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (20:37 IST)

விஜய்யின் 'லியோ'வுடன் பிரபாஸின் 'சலார்' மோதல்?

பிரபாஸின் சலார் படம் விஜய்யின் லியோவுடன் மோதவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர், பாகுபலி படத்திற்கு பின்  பான் இந்தியா ஸ்டாராக அறியப்படுகிறார்.

இவரது நடிப்பில், ராதேஸ்யாம், ஆதிபுரூஸ் ஆகிய   படங்களுக்கு அடுத்து, கேஜிஎஃப்  பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சலார்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் டீசர் ஜூலை 6 ஆம் தேதி அதிகாலை வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது.
 
salaar -prabash- prashanth neels

இந்த படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், விஜய்யின் லியோ படத்துடன் சலார் படம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சலார் படம் அடுத்தாண்டு  ஜனவரியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகிறது.