அடுத்த படத்திற்கு தயார்? துப்பாக்கி சுடும் பயிற்சியில் கே.ஜி.எஃப் ஹீரோ
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். இவர் பிரசாந்த் நீல் இயக்கிய கே.ஜி.எஃப் என்ற படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பையும், வசூல் சாதனையும் படைத்தது.
இதையடுத்து, கேஜிஎஃப் 2 ஆம் பாகம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
எனவே யாஷின் அடுத்தடுத்த படமும் இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்று, அடுத்த படத்திற்கான எதிர்பார்பும் அதிகரித்துள்ளது.
தற்போது மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் ஹாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான ஜே.ஜே.பெர்ரரியை லண்டனில் சந்துள்ளார்.
அவரது பயிற்சி கூடத்தில் யாஷ் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
எனவே யாஷ் அடுத்து ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், ஜே.ஜே.பெர்ரி ஸ்பை, ஜான் சிக் 2 போன்ற படங்களுக்கு ஆக்சன் டிரைக்டராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது,