வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (08:15 IST)

“எனக்கு கூகுள் பே மூலமாக பணம் அனுப்பி உதவி செய்ங்க..” – கூல் சுரேஷ் கோரிக்கை

சமீபத்தில் நடந்த சரக்கு பட இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளியினிடம்
தவறாக நடந்து கொண்ட கூல் சுரேஷை பலரும் மேடையிலேயே கண்டித்தார். படத்தின் தயாரிப்பாளர் மன்சூர் அலிகான் மேடையிலேயே அவரை அந்த தொகுப்பாளியினிடம் மன்னிப்புக் கேட்கவைத்தார்.

தொடர்ந்து இதுபோல கோமாளி தனங்களை செய்துவரும் கூல்சுரேஷ் இப்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “நான் பலருக்கு உதவி செய்துள்ளேன். அவர்கள் எல்லாம் எனக்கு போன் செய்து இப்போது அட்வைஸ் செய்கிறார்கள். இருந்தாலும் நான் செய்தது தப்பு.

நான் ஒன்றும் பணக்காரனனாக பங்களாவில் வாழவில்லை. மிடில்கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன்தான். இப்போது வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். எனக்கு உதவி செய்யுங்கள். என் நம்பர் தெரிந்தவர்கள் கூகுள் பே மற்றும் போன் பே மூலமாக பணம் அனுப்பி உதவி செய்யுங்கள். மன்சூர் அலிகான் அண்ணா நீங்களும் எனக்கு உதவி செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.