1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2023 (17:53 IST)

மன்சூர் அலிகான் பட பாடலை ரிலீஸ் செய்த லோகேஷ்

mansoor alikhan- lokesh
தமிழ் சினிமாவின்  பிரபல நடிகர் மன்சூர் அலிகான். இவர், தற்போது விஜயுடன் லியோ என்ற படத்தில் நடித்துள்ளார்.
 

இப்படத்தை அடுத்து, அவர் தானே தயாரித்து, நடித்துள்ள படம் சரக்கு.  அப்படத்தில் அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ்  நடித்துள்ளார். இப்படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு மகேஷ் டி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி சமீபத்தில் வெளியிட்டார்.

இந்த நிலையில்,  படத்தில் மன்சூர் அலிகான் எழுதி , இசையமைத்த "சரக்கு" படத்தின் 'ஆயி மகமாயி'...  பாடலை 'லியோ' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்!. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.