அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் சிலர் போலியான கணக்குகள் மூலம் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
என் ரசிகர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது இதுதான்: எப்போதும் போல உங்கள் கருத்துகளை யோசித்து, பொறுப்புடன் வெளிப்படுத்துங்கள். ஆன்லைன், ஆப்லைனில் எந்த விதமான தவறான கருத்துகளையும் பகிர வேண்டாம்.
மேலும், என்னுடைய பெயரை பயன்படுத்தி போலியான சமூக வலைதள கணக்குகளை தொடங்கி, அவதூறான கருத்துகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் இப்போது தெரிவித்து கொள்கிறேன்.
அதுபோலவே, அந்த போலி கணக்குகள் மூலம் வெளியாகும் கருத்துகளுக்கு என் ரசிகர்கள் எவ்வித ஆதரவையும் தெரிவிக்க வேண்டாம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Siva