1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2023 (20:46 IST)

மீண்டும் சினிமா தயாரிப்பாளரான ரஜினி மகள்...ஹீரோ இவர் தான்!

SOUNDARYA RAJINIKANTH
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா மீண்டும் தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா. இவர், கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் அவர் புதிய வெப் தொடரை தயாரிக்கிறார்.

 நோவா ஆபிரஹாம் இயக்கும் இந்த வெப்தொடரில், நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறாஅர். கேங்க்ஸ் வெப் தொடரின் பூஜை  சமீபத்தில்   நடைபெற்ற நிலையில்,  இன்று இப்பட ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து இன்று சவுந்தர்யா தன் சமூக வலைதள பக்கத்தில், ''2010 ஆம் ஆண்டு கோவா படத்தை தயாரித்தேன்.13 ஆண்டிற்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்துள்ளேன். இன்று ஷூட்டிங் தொடங்கியது'' என்று தெரிவித்துள்ளார்.