1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (13:48 IST)

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாகும் ரம்யா பாண்டியன்

ramya
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாக நடிக்க ரம்யா பாண்டியன் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரவ் சமீபத்தில் கலகத்தலைவன் என்ற படத்தில் வில்லனாக நடித்து கலக்கி இருந்தார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஆரவ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை கணேஷ் விநாயகம் என்பவர் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே தேன் என்ற படத்தை இயக்கிய நிலையில் தற்போது இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தில் ஆரவ் ஜோடியாக ரம்யா பாண்டியன் நடிக்க இருப்பதாகவும் இவர்களது மகளாக கீர்த்தி என்ற குழந்தை நட்சத்திரம் நடிகை இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கொண்டு இந்த படம் எடுக்கப்படுவதாக இயக்குனர் கணேஷ் நாயகம் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran