செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (20:15 IST)

பிக்பாஸ் சீசன் 6: டிக்கெட் டு ஃபினாலேவை தட்டி தூக்கிய போட்டியாளர்!

kamal biggboss
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் வைக்கப்பட்ட டாஸ்க்கில் அதிக புள்ளிகள் எடுத்தவர்கள் எடுத்து போட்டியாளர் ஒருவர் நேரடியாக ஃபினாலேவுக்கு தகுதி பெறுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இதனை அடுத்து பிக் பாஸ் வீட்டில் உள்ள 8 போட்டியாளர்களும் அந்த டிக்கெட்டை  பெறுவதற்காக கடுமையாக விளையாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த வாரத்தில் அருமையாக விளையாடி டிக்கெட் டு பினாலே என்ற போட்டியில் வெற்றி பெற்றவர் அமுதவாணன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து அமுதவாணன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்த வாரங்களில் மேலும் சில போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நிலையில் அதில் ஒருவர் பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran