புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 23 நவம்பர் 2024 (08:49 IST)

ராம்குமார் விஷ்ணு விஷால் படத்தில் நடந்த அதிரடி மாற்றம்!

விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் கூட்டணியில் உருவான முண்டாசுப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர்கள் கூட்டணியில் உருவான ராட்சசன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து நான்கு ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஒப்பந்தம் ஆனது. இது ஒரு காதல் பேண்டஸி திரைப்படம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் படத்தின் ஷூட்டிங் 20 நாட்கள் கொடைக்கானலில் தொடங்கி நடத்தப்பட்டது. அதன் பிறகு விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் பிஸியானதால் இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

ராம்குமார் தன்னுடைய பாணியாக மிக மெதுவாக இதன் ஷூட்டிங்கை நடத்தியுள்ளார். ஆனால் இது தயாரிப்பு நிறுவனத்துக்குப் பிடிக்காததால் இந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். அதன் பிறகு படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷாலே இந்த படத்தை இப்போது தயாரித்து வருகிறார்.  இன்னும் சில நாட்களுக்குப் பிறகு ஷூட்டிங் முழுவதும் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.