புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (13:33 IST)

’நானும் ரெளடிதான்’ படக்காட்சிகளை நீக்க வேண்டும்: 24 மணி நேரம் கெடு விதித்த தனுஷ்..!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண குறித்த வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள நிலையில், அதில் நானும் ரவுடிதான் படத்தின் மூன்று நிமிட சர்ச்சைக்குரிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இந்த காட்சிகளை திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் பத்து கோடி ரூபாய் கேட்டதாகவும், இது குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், தனுஷ் முறையாக அனுமதி தராத நிலையிலும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நேற்று வெளியான நயன்தாராவின் திருமண வீடியோவில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தனுஷின் வழக்கறிஞர் நயன்தாரா தரப்புக்கு நானும் ரவுடிதான் படத்தின் மூன்று நிமிட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று 24 மணி நேர கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து, இந்த காட்சி நீக்கப்படுமா அல்லது சட்ட ரீதியாக இந்த பிரச்சனையை நயன்தாரா தரப்பு சந்திக்குமா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..


Edited by Mahendran