தொடர்புடைய செய்திகள்
- நான் இடையில் சினிமாவை விட்டு விலகியது என் முடிவல்ல.. என் முன்னாள் காதலரின் நிர்ப்பந்தம்- நயன்தாரா!
- ஏன் உளுந்தூர் பேட்டையில் உள்ள நாய்க்கு பிரியாணி கிடைக்கக் கூடாதா?... காதல் குறித்த மீமுக்கு விக்னேஷ் சிவன் பதில்!
- என் முன்னாள் காதலர்களிடம் ஏன் எதுவுமேக் கேட்பதில்லை?… நயன்தாரா ஆவேசம்!
- சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்… சம்மந்தப்பட்ட காட்சி நீக்கப்பட்டதா?
- அன்னைக்கு அவரை அப்படி பாத்தப்போ.. காதலில் விழுந்துட்டேன்! - நயன்தாரா சொன்ன காதல் கதை!
எங்கள் முதுகுக்குப் பின்னால் பேசுபவர்கள் பற்றி கவலையில்லை.. தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா ஆவேசம்!
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாகி இன்று நெட்பிளிக்ஸில் ரிலீஸாகியுள்ளது.
இந்த திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் தாமதமாக இந்த வீடியோ வெளியாக நடிகரும் நானும் ரௌடிதான் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ்தான் காரணம் என நயன்தாரா குற்றம் சாட்டினார். நானும் ரௌடிதான் காட்சிகளைப் பயன்படுத்த அனுமதி கேட்ட நிலையில் 2 ஆண்டுகளாக அதற்கு அனுமதிக்காமல் இழுத்தடித்தார் என்று கூறினார்.
இது சம்மந்தமாக தனுஷ் மற்றும் நயன்தாராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா “எங்கள் முதுக்குப் பின்னால் பேசுபவர்கள் பற்றி கவலையில்லை. எங்களுக்கு நிறைய வேலை உள்ளது. அவர் சொல்வது போல இரண்டு ஆண்டுகள் காத்திருந்தேன் என்பதெல்லாம் பொய். இது குறித்து எதுவும் பேச நாங்கள் விரும்பவில்லை. நானும் எனது மகனும் இப்போது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.
