திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (12:56 IST)

பிரிவதில் உறுதியாக இருக்கின்றோம்: நீதிமன்றத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா..!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இருவரும் நேரில் ஆஜராகி, தாங்கள் இருவரும் பிரிவதில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறிய நிலையில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில்,  இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். 
 
இந்த மனு மீது ஏற்கனவே மூன்று முறை விசாரணை நடைபெற்ற நிலையில், மூன்று முறையும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் நேரில் ஆஜர் ஆகினர். 
 
அப்போது நீதிபதி அவர்களிடம் சில கேள்விகள் கேட்டதாகவும், இருவரும் தாங்கள் பிரிவதில் உறுதியாக இருக்கிறோம் என்று நீதிபதியிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, நவம்பர் 27ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran