செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (19:10 IST)

நடிகர் ராஜ்கிரண் மகள் காதல் திருமணமா? குடும்பத்தினர் அதிர்ச்சி!

munisraja jeenath
நடிகர் ராஜ்கிரண் மகள் காதல் திருமணமா? குடும்பத்தினர் அதிர்ச்சி!
நடிகர் ராஜ்கிரணின் மகள் பெற்றோர் சம்மதமின்றி காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பேஸ்புக் மூலம் சீரியல் நடிகர் முனிஷ்ராஜ் என்பவரை காதலித்து அதன்பின் அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது
 
இந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி சம்மதிக்காத நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி நண்பர்கள் முன்னிலையில் முனிஷ்ராஜை ராஜ்கிரணின் மகள் திருமணம் செய்து விட்டதாக கூறப்படுகிறது 
 
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முனிஷ்ராஜ், சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் நடித்தவர் என்பதும் அது மட்டுமின்றி தமிழ் நடிகர் சண்முகராஜனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது