1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (14:41 IST)

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மருத்துவமனையில் அனுமதி!

deepa
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணனுக்கு தீபா, தீபக் என்ற இரண்டு வாரிசுகள் உள்ளனர். ஜெயலலிதாவின் சொத்துகளுக்கும் இவர்கள் இருவர் தான் வாரிசுகள் என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சென்னை தி நகர் வீட்டில் கணவருடன் வசித்து வந்த தீபா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தீபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறித்து அவரது கணவர் மாதவன் கூறியபோது தற்போது தீபா மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மருந்தின் தாக்கம் அவரிடம் உள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் தீபா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டாலும் இந்த  தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது