1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By siva
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (19:26 IST)

திருமண தினத்தில் தப்பியோடிய மாப்பிள்ளை: விரட்டி விரட்டி பிடித்த மணமகள்!

marriage1
திருமண தினத்தில் தப்பியோடிய மாப்பிள்ளை: விரட்டி விரட்டி பிடித்த மணமகள்!
நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை திடீரென திருமணம் வேண்டாம் என தப்பித்துச் செல்ல முயற்சித்த போது மணப்பெண் அவரை விரட்டி விரட்டி பிடித்து திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து வைக்க இருதரப்பு பெற்றோர்கள் நிச்சயம் செய்தனர். வரதட்சிணை மற்றும் இரு சக்கர வாகனத்துடன் இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டது
 
ஆனால் கடைசி நேரத்தில் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் திடீரென திருமண நேரத்தில் தப்பி ஓடியதாக தெரிகிறது. இதனை அடுத்து இந்த தகவல் தெரிந்த மணமகள் மக்கள் கூடும் இடங்களில் இளைஞரை விரட்டி விரட்டி பிடித்து மடக்கி திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதனை அடுத்து அந்த திருமணம் நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது