புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (16:08 IST)

ரஜினிக்காக கதை எழுதியுள்ள ஷங்கரின் உதவியாளர்… மீண்டும் நடக்குமா ஒரு தில்லு முல்லு!

நடிகர் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தை நடித்து முடித்துக் கொடுத்துவிட்டு இப்போது அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனைகளுக்காக சென்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை சென்றுள்ள ரஜினி, இந்தியா திரும்பியதும் தனது அடுத்த படத்துக்கான முடிவை எடுக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசிங் பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், இப்போது ஷங்கரின் உதவியாளர் பிரபு என்பவரின் பெயரும் அடிபட்டு வருகிறது. இவர் ரஜினிக்காக தில்லு முல்லு பாணியில் முழு நீள நகைச்சுவை கதை ஒன்றை ரஜினிக்காக எழுதி வைத்து அவரிடம் சொல்ல காத்திருக்கிறாராம்.