வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (13:20 IST)

காத்திருக்கும் கொரோனா மூன்றாவது அலை! நடவடிக்கை என்ன? – நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் நாளை பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்திருந்த நிலையில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்துவது மூலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவுதலை எதிர்கொள்ளல் குறித்து ஆலோசிக்க நாளை பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.