புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 4 நவம்பர் 2020 (15:48 IST)

காதலுக்கு எதிர்ப்பு…காதலியின் அண்ணனை சுட்டுக்கொன்ற பிரபல யூடியூபர் கைது !

பிரபல யூடியூப் சேனலை நிர்வகித்து வந்தவர் நிஜாமுல் கான். இவர் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த காதலியின் அண்ணனைச் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வந்தவர் நிஜாமுல் கான் (24) . இவர்  பிரபல யூடியூப் சேனலை நிர்வகித்து வந்தால் சற்று பிரபலமாக இருந்துள்ளார்.

இவர்  ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலுக்கு அப்பெண்ணின் அண்ணன் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நிஜாமுல் கான் அவரை சுட்டுக்கொன்றார்.இதுகுறித்து அறிந்த போலீஸார் யூடியூபரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.