1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 4 நவம்பர் 2020 (15:27 IST)

வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் சசிக்குமார் ! எகிறிய எதிர்பார்ப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன். பல முன்னணி நடிகர்கள் அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வமுடன் உள்ளாப்னர்.

இந்நிலையில் தனுஷை வைத்து அவர் இயக்கிய ஆடுகளம், வட சென்னைஉ, அசுரன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். அடுத்து சூரி நடிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், விசாரணை, என்.எஹ்.47 ஆகிய படங்களைப் போன்று ஃபைவ் ஸ்டார் கிரியேஷன் கதிரேசனுடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து, கதை , திரைக்கதை எழுத உள்ளார் வெற்றிமாறன்.

இதுகுறித்த ஒரு அதிராப்பூர்வமான தகவலை ஃபைவ் ஸ்டர் கதிரேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவர்  இயக்குவார் என தெரிகிறது.