திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (15:28 IST)

சசிகலா முன்கூட்டிய வெளியே வருகிறாரா ...??? நரசிம்மமூர்த்தி தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், டிடிவி.தினகரனின் உறவினருமான சசிகலா ஊழல் வழக்கில் தற்போது பெங்களூர் அஹ்ரகார சிறையில் தண்டனை பெற்று வரும் நிலையில் முன்கூட்டியே  விரைவில்  விடுதலை ஆகவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் அமமுகவினர் உற்சாகம் அடைந்தனர்.

மேலும், சசிகலா விடுதலை ஆவது குறித்து  நரசிம்ம மூர்த்தி  கூறியதாவது :

சசிகலா இதுவரை பரோலில் எத்தனை முறைவெளியே வந்திருக்கிறார் என்பது குறித்து அறிவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்ததாகவும்,  இதற்கு எதிராக சசிகலா கோரிக்கை விடுத்துள்ளதை நிராகரித்து சிறைத்துறை நிர்வாகம் பதில் கூறியுள்ளதாகவும், இதுவரை 2 முறை பரோலில் வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தண்டனை காலம் முடிவடையாமல் சசிகலா முன்கூட்டியே வெளிவர வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.