புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 25 டிசம்பர் 2024 (08:03 IST)

ஹபீபி படத்தில் ஏ ஐ தொழில்நுட்பம மூலமாக மறைந்த பாடகர் நாகூர் ஹனிபாவின் குரலில் ஒரு பாட்டு!

அவள் பெயர் தமிழரசி ,விழித்திரு ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த இயக்குநர் மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும்  படம் ஹபீபி. அரபுச் சொல்லான ஹபீபிக்கு  தமிழில் 'என்அன்பே' என்று அர்த்தம். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகி சமூகவளைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை பற்றிய படமாக இருக்கும் என இயக்குனர் மீரா கதிரவன் தெரிவித்துள்ளார். அறிமுக நாயகன் ஈஷா நடிக்க ஜோ என்கிற படத்தின் மூலம் இளைஞர்களிடேயே பெரிதும் கொண்டாடப்பட்ட மாளவிகா மனோஜ் நாயகியாக நடிக்கிறார். கஸ்தூரி ராஜா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை மறைந்த பாடகர் நாகூர் ஹனிபா பாடுவது போல ஏ ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளார்களாம். சமீபகாலமாக ஏ ஐ தொழில்நுட்பத்தில் இதுபோல பாடல்கள் மறைந்த பாடகர்களின் குரல்களில் உருமாற்றப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.