நானும் அரசியல்வாதிதான்; ரஜினி, கமலோடு இணைய மாட்டேன்: பிரகாஷ்ராஜ்
ரஜினி, கமல் இருவரும் நல்ல நோக்கத்துடந்தான் வந்துள்ளார்கள். நான் அவர்களோடு இணையும் முடிவில் இல்லை என்று நடிகர் பிரகாஷ்ரா தெரிவித்துள்ளார்.
பிரகாஷ்ராஜ் அரசியல் கருத்துகள் தெரிவிப்பது, அரசியல் கட்சிகளை விமர்சினமும் செய்து வருகிறார். குறிப்பாக பாஅக கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இவர் 60வயது மாநிறம் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாடு, கர்நாடகாவில் கிராமங்களை தத்தெடுத்துள்ளேன். தெலுங்கானாவில் 10 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து வருகிறேன்.
களத்தில் இறங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கேள்வி கேட்பவனாக இருப்பதும் அரசியல்தான். இதுவும் சமூகத்துக்கு அவசியம்.
ரஜினி, கமல் இருவரும் நல்ல நோக்கத்தோடுதான் வந்து இருக்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்வது பற்றி மக்கள் தான் முடிவு செய்யவேண்டும். நான் அவர்களோடு இணையும் முடிவில் இல்லை என்று கூறியுள்ளார்.