திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (13:33 IST)

பாஜக ரஜினி, கமல் பின்னால் சென்று கொண்டிருக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி

தமிழக பாஜக ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் பின்னால் சென்று கொண்டிருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது மற்றவர்களை விமர்சிப்பதும், சர்ச்சையான கருத்தை தெரிவிப்பதும் வழக்கம். தற்போது அவர் பாஜக மீதே குற்றம்சாட்டியுள்ளார்.
 
குறிப்பாக தமிழக பாஜகவை விமர்சித்துள்ளார். தென் இந்தியாவில் பாஜகவின் ஆதரவு மிகவும் குறைவு. குறிப்பாக தமிழகத்தில் பாஜக நோட்டாவை விட குறைவாக வாக்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:-
 
தமிழக பாஜக தற்போது கமல், ரஜினி போன்ற நடிகர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. அதை நிறுத்தவிட்டு தத்துவத்தை முன் நிறுத்தினால் மட்டுமே பாஜக வெற்றி பெற முடியும். ரஜினி, கமல் பின்னால் சென்றால் பாஜகவுக்கு ஓட்டு கிடைக்காது என்று கூறியுள்ளார்.