எதிர்பார்த்தது போலவே ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா: இது நியாயமா பிக்பாஸ்?
இந்த பிக்பாஸ் சீசனில் பார்வையாளர்களுக்கு அதிகபட்ச வெறுப்பை தந்தவர் என்றால் அது ஐஸ்வர்யாதான். இதனை அவர் வெளியே வந்தவுடன் புரிந்து கொள்வார். ஜூலி, காயத்ரியை விட பலமடங்கு எரிச்சலை தந்து கொண்டிருக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஐஸ்வர்யாவை ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசன் கண்டிக்காமல் இருந்தது மட்டுமின்றி மறைமுக ஆதரவும் கொடுத்து காப்பாற்றி வருவதே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பின்னடைவு
இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ஐஸ்வர்யா இருக்கின்றார் என்ற நிலை ஏற்பட்டவுடன் உடனே யாஷிகாவுக்கு ஒரு சிறப்பு சலுகையை கொடுத்து நாமினேட் செய்யப்பட்ட யாராவது ஒருவரை அவர் காப்பாற்றலாம் என்று கூறுகிறார். அனைவரும் எதிர்பார்த்தபடியே ஐஸ்வர்யா மீண்டும் யாஷிகாவால் காப்பாற்றப்படுகிறார். இப்படி ஒரு மோசடி நிகழ்ச்சியை நடத்துவதைவிட கேவலம் வேறு எதுவும் இல்லை என்றே நெட்டிசன்கள் ஆத்திரப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
எது எப்படியோ இந்த பிக்பாஸ் மூலம் புகழ்பெற்று அரசியலில் பெரிய ஆளாகிவிடலாம் என்ற கமல்ஹாசனின் கனவு கானல் நீராகவே மாறிவிட்டது போல்தான் தோன்றுகிறது. கமல்ஹாசனுக்கு ஓரளவு இருந்த புகழும் இந்த நிகழ்ச்சியினால் கெட்டுவிட்டது என்பதே உண்மை