திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (14:12 IST)

மெனு கொடுத்தாச்சு! இன்று தாளிக்க போறாராம் கமல்?

கடந்த இரண்டு மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸும் சரி, கமல்ஹாசனும் சரி நிகழ்ச்சியை நடுநிலையோடு நடத்தாமல் ஒருசிலருக்கு மட்டும் சாதகமாகவும், ஒருசிலரை ஓரவஞ்சகமாகவும் நடத்தி வருகின்றனர்.
 
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சீனியரான மும்தாஜை இன்னும் ஒருமுறை கூட தலைவி ஆக்கவில்லை. ஆனால் எவிக்சனில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே யாஷிகாவையும் ஐஸ்வர்யாவையும் இரண்டு முறை தலைவியாக்கியுள்ளார் பிக்பாஸ். 
 
மேலும் ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் சிறப்பு சலுகை வழங்கி அவர்கள் இருவரையும் காப்பாற்றுவதிலேயே பிக்பாஸ் குறியாக உள்ளார். அதேபோல் கமல்ஹாசனும் ஐஸ்வர்யாவையும், மகத்தையும் யாஷிகாவையும் கொஞ்சம் கூட கண்டிப்பதில்லை.
 
ஆனால் இந்த முறை இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்களே வெறுப்பாகி கமலிடம் மகத், யாஷிகா, ஐஸ்வர்யா குறித்து குற்றம் சாட்டினர். இதனால் வேறு வழியின்றி இன்று நிச்சயம் மூவரையும் தாளிக்கின்றேன் என்று கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் தாளிப்பாரா? இல்லை வழக்கம்போல் சுயபுராணம் பாடிவிட்டு சொதப்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்