1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (08:44 IST)

பொன்னியின் செல்வன் ப்ரமோஷன்… தமிழ்நாட்டை மட்டும் தவிர்க்கிறாரா விக்ரம்?

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து இப்போது படக்குழுவினர் இந்தியா முழுவதும் படத்துக்காக ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் விக்ரம் மட்டும் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் அடுத்த நாளான நேற்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விக்ரம் கலந்துகொண்டார். இதனால் தமிழ்நாட்டில் மட்டும் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்க்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.