புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (22:03 IST)

விஜய் 67 படத்தில் நடிக்கிறீர்களா? நடிகை த்ரிஷா பதில்

ponniyin selvan
விஜய் 67 படத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகை த்ரிஷா பதில் அளித்துள்ளார்.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ‘’பொன்னி நதி’’ என்ற பாடல் ரிலீஸானது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களுக்குப் பிறகு இந்தியாவில் பொரும் பொருட்செலவில் 2 பாகங்களாகத் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு உலகத் தமிழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், சமீபத்தில் ஒரு  நேர்காணலில்  நிகழ்ச்சித் தொகுப்பாளார், த்ரிஷாவிடம் தளபதி67 படத்தில் நடிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, த்ரிஷா,  தற்போது, பொன்னியின் செல்வன் பட புரமொஷனில் இப்படம் பற்றி மட்டுமே பேசவேண்டுமென கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே, விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த,கில்லி, ஆதி, திருப்பாச்சி,  குருவி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.