ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (08:31 IST)

மடோன் அஸ்வின் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா?... வெளியான தகவல்!

யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீரன் திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கிய முதல் படத்துக்கும் இரண்டாம் படத்துக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது.

இரண்டாவது படத்தில் அவர் சிவகார்த்திகேயன் என்ற மாஸ் ஹீரோவுக்காக சமாதானங்கள் செய்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் அவர் பாலிவுட்டில் பிரபல இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக தமிழில் ஒரு படத்தை அவர் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அவர் சூரி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.