1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 ஜூலை 2022 (16:12 IST)

’பொன்னி நதி’ வந்தியதேவனுடன் ஆடித்திருநாள்…. PS1 சிங்கிள்!

பொன்னி நதி என பெயரிடப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாக உள்ளது.


பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

இதனை அடுத்து விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் வரும் ஜூலை 31 ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்துள்ள இந்த பாடல் நிச்சயம் இசை ரசிகர்களின் ஆதரவை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பாடலுக்கு பொன்னி நதி என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில்  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்.