செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (19:02 IST)

பொன்னியின் செல்வன் மாஸ் அப்டேட் தந்த லைகா!

ponniyin selvan
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது
 
தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் சற்று முன்னர் லைக்கா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் டிரம்ஸ் சிவமணி ஆகிய இருவரும் பின்னணி இசை அமைக்கும் காட்சி உள்ளது 
 
இந்த காட்சி காண்போரை அசத்தும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் இந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது