திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (18:24 IST)

பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Ponniyin Selvan
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. 
 
இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் இதனை அடுத்து விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வரும் ஜூலை 31ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்துள்ள இந்த பாடல் நிச்சயம் இசை ரசிகர்களின் ஆதரவை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில்  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்