1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (18:19 IST)

'பொன்னியின் செல்வன்' படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ!

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில்  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் நம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 
இதைத்தொடர்ந்து, பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மேக்கிங் ஆப் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில், சோழர்களின் காலம்தான் தமிழர்களின் பொற்காலம் என்ற தலைப்பில் வரலாற்றாரிசியர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், போன்றோ  சோழர்கள் பற்றிய பெருமையளைக் கூறும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக இருக்கும் புலி திரைப்படத்திலும் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது