போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. திரையரங்குகள் மூலமாக மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியது.
இதையடுத்து கவனிக்கப்படும் இயக்குனராக உருவான விக்னேஷ் ராஜா அடுத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் ஆனது. ஆனால் இப்போது அந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்குக் காரணம் தனுஷால் இப்போது உடனடியாக அந்த படத்துக்குத் தேதிகள் ஒதுக்க முடியாத சூழல் உள்ளதே என சொல்லப்படுகிறது. அதனால் விக்னேஷ் ராஜா இப்போது அசோக் செல்வனைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.