திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 8 ஜூன் 2018 (17:39 IST)

டிரம்ஸ் வாசித்து விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டை குஷிப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்

டிரம்ஸ் வாசித்து விஜய் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டை குஷிப்படுத்தியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கிவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘தளபதி 62’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது. ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள மூன்றாவது படம் இது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதியாக நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் டிரம்ஸ் வாசித்து குஷிப்படுத்தியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் டிரம்ஸ் வாசிக்கும்  வீடியோவை, அவரே யூ டியூபிலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.