தொடர்புடைய செய்திகள்
- கவுதமாலா எரிமலை வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு
- வெடித்து சிதறிய பியுகோ எரிமலை: 25 பேர் பரிதாப பலி!
- மண்டியிட்டு கெஞ்சியதால்தான் இந்த சந்திப்பு: அமெரிக்கா வெளியிட்ட சர்ச்சை தகவல்...
- தரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ!
- கூர்க்காப்படைகளை களமிறக்கும் சிங்கப்பூர்: யார் இந்த கூர்க்காப்படையினர்?
பியுகோ எரிமலை வெடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு
கவுதமாலா நாட்டில் உள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
கவுதமாலா நாட்டின் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. அதில் இருந்து 10 கி.மீ தொலைவிற்கு செந்நிற, 700 டிகிரி வெப்பம் மிகுந்த லாவா வெளியேறியது.
இதனால் அங்குள்ள வீடுகள் லாவாவுக்கு இரையாகின. மேலும், இந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் லாவாவில் சிக்கிக்கொண்டனர். இதில் இருந்து மக்களை காப்பாற்ற அங்குள்ள பேரிடர் மீட்பு குழு போராடி வருகிறது. நேற்று வரை எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 69 ஆக இருந்தது. ஆனால், தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மீட்பு படையினர் அங்குள்ள பகுதிகளில் பணியில் ஈடுபட்டு இருந்த போது 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
