1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2018 (13:03 IST)

இயக்குநர் சற்குணத்தின் லோகோவை வெளியிட்ட ஓவியா

இயக்குநர் சற்குணம் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய லோகோவை, ஓவியா இன்று வெளியிட்டார்.
‘களவாணி’ படத்தை இயக்கிய சற்குணம், தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஒன்று, மாதவனை வைத்து அவர்  இயக்கும் படம். இன்னொன்று, ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம்.
 
இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இருக்கிறார் சற்குணம். விமல் நடிப்பில் வெளியான ‘மஞ்சப்பை’, நயன்தாரா நடிப்பில் வெளியான  ‘டோரா’ படங்களில் தயாரிப்பாளர் அவர்தான்.
 
இந்நிலையில், தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளார் சற்குணம். இந்த லோகோவை, தன்னுடைய முதல் படத்தின்  ஹீரோயினும், ‘பிக் பாஸ்’ மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்து வைத்திருப்பவருமான ஓவியா, இன்று காலை 10 மணிக்கு ட்விட்டரில் இந்த லோகோவை  வெளியிட்டார்.