திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (12:22 IST)

ஓவியாவுக்கும்-நடிகர் அன்சன் பாலுக்கும் என்ன தொடர்பு?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் அமோக ஆதரவை பெற்றவர் நடிகை ஓவியா. கடந்த வருடத்தில் நாயகிகள் பெயர்களில்  ரசிகர்களால் அதிகம் சொல்லப்பட்டது என்றால் அது ஓவியா பெயர்தான். ரசிகர்கள் இவருக்காக ஓவியா ஆர்மியை உருவாக்கி  அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் விளம்பரங்களிலும், படங்களிலும் நடித்து வருகிறார். காஞ்சனா 3 படத்தில் ராகவா  லாரன்ஸுடன் நடித்து வருகிறார். அதோடு ஒரு தெலுங்கு படமும் நடித்திருக்கிறார். தற்போது ஓவியா, ரெமோ படத்தில்  வில்லனாக நடித்த அன்சன் பால் என்பவருடன் ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறாராம். இதில் விஷயம் என்னவென்றால், அன்சன் பாலும் ஓவியாவும் கேரளாவில் திருச்சூரை சேர்ந்தவர்கள். அதுமட்டும் இல்லாமல் திருச்சூரில் ஒரே பகுதியில்  வசிப்பவர்கள். இவர்களது குடும்பத்தை தாண்டி ஓவியா- அன்சன் இருவருக்கும் ஏற்கெனவே அறிமுகம் இருப்பதாகவும்  கூறப்படுகிறது.