திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2018 (16:40 IST)

தனது ரசிகரின் வீட்டிற்கு சென்று அதிர்ச்சி கொடுத்த ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அதற்கு காரணம் அவரின் ஆக்டிவிடிஸ்தான் முக்கிய காரணம் என அனைவரும் அறிந்ததே. ட்விட்டரில் ஓவியா ஆர்மியை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அவ்வபோது நடிகை ஓவியா தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து  வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று இன்ப அதிர்ச்சி  கொடுத்துள்ளார். அந்த வீட்டு குழந்தையை தூக்கி அவர் கொஞ்சும் புகைப்படம் சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொஞ்சம் கூட பந்தாவே இல்லாமல் ரசிகரின் வீட்டிற்கு சென்றதால்தான் அவர் எங்களின் தலைவி என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் பெருமைப்  படுகிறார்கள். 
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் நாளை காலை 9 மணிக்கு அழகிய ஓவியா நிகழ்ச்சியில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுடன் பொங்கல் கொண்டாடுகிறார் ஓவியா. நிகழ்ச்சியை காணத் தவறாதீர்கள் என்று ஓவியா ஆர்மி ட்வீட்டி வருவது குறிப்பிடத்தக்கது.