திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (17:43 IST)

’நம்ம வீட்டுப் பிள்ளை’க்கு கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது முதல் காட்சி முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்து வருவதால் இந்த படம் ஹிட் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
 
பாண்டியராஜனின் உருக்கமான வசனங்கள் இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் என்றும் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துள்ளதாகவும், ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு இந்த படத்தின் ப்ளஸ் அம்சமாக இருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
 
முதல் பாதி முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியின் காமெடியால் படம் நகர்கிறது என்றும் இரண்டாம் பாதியில் தங்கை சென்டிமென்ட் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் பார்வையாளர்களை இயக்குனர் பாண்டிராஜ் நெகிழ வைத்துள்ளதாகவும் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த படத்தில் எதுவும் புதுமை இல்லை என்றாலும் படம் ஒரு குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் உள்ள ஒரு எண்டர்டெயின்மெண்ட் படம் என்றும் படம் நிச்சயம் ஹி என்றும் சமூக வலைதள விமர்சகர்களில் தெரிவித்து வருகின்றனர் 
 
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான மிஸ்டர் லோக்கல், சீமராஜா போன்ற படங்கள் படு தோல்வியை அடைந்த நிலையில் மீண்டும் அவரை வெற்றிப் பாதைக்கு ’இந்த நம்ம வீட்டு பிள்ளை’ அழைத்துச் சென்றுள்ளது என்பது என்பதில் சந்தேகமில்லை