திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (11:23 IST)

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ': பர்ஸ்ட்லுக் ரிலீஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது 
 
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள இன்னொரு படமான 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது  போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் 'ஹீரோ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என இயக்குநர் பிஎஸ் மித்ரன் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று காலை இந்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் கையில் ஒரு மாஸ்க் இருப்பது போல் இருப்பதால் இந்த படத்தின் கதையும் 'இரும்புத்திரை' கதை போல் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை  கேஜேஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், இவானா , விவேக், யோகிபாபு, வடிவேலு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.